ரஷ்யாவின் முழு எண்ணெய் துறை மீதும் கட்டுப்பாடற்ற தடைகளை விதிக்க வேண்டும் என அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுக்கு தக்க பதிலடி கொடுக்க தங்களுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். உக்ரைனுக்கு மேலும் கூடுதல் ஆதரவை தர வேண்டும் என கோரி லண்டனில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களிடம் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார்.