உக்ரைனியர்கள் இல்லாமல் உக்ரைனின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடாது என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்தார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், உக்ரைன் தீர்வில் ஐரோப்பியர்களும் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்றும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் தொடர்ந்து நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவேன் எனவும் கூறியுள்ளார்.