காசாவை போல அழிக்கப்படுவதற்கு முன்னதாக, ஹிஸ்புல்லாவிடம் இருந்து உங்கள் நாட்டை விடுவியுங்கள் என லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு பேசிய அவர், பலவீனமான ஹிஸ்புல்லா அமைப்பிடம் இருந்து விடுபட்டால் தான் போர் முடியும் என திட்டவட்டமாக கூறினார்.