பிரேசில் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்த போல்சனாரோ, முறைகேடு நடந்ததால் தான் தோல்வி அடைந்ததாக குற்றம் சாட்டி புதிய அரசு அமைவதை தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.