பாலஸ்தீன கால்பந்தின் பீலே என்று அழைக்கப்பட்ட சுலைமான் அல்-உபைத் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தார். 41 வயதான சுலைமான், ஆகஸ்ட் 6 ஆம் தேதி, காசாவில் உள்ள உணவு விநியோக மையத்தில் உணவிற்காக தனது குழந்தைகளுடன் வரிசையில் காத்திருந்த போது, இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் கொல்லப்பட்டார். இதனால் காசாவில் கொல்லப்பட்ட கால்பந்து வீரர்களின் எண்ணிக்கை 220 ஆகவும், விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பலி எண்ணிக்கை 662 ஆகவும் உயர்ந்துள்ளது. கால்பந்து தொடர்பானவர்களின் இறப்பு எண்ணிக்கை 321-ஐ எட்டியுள்ளது.