காசாவில் உள்ள மக்களுக்கு விமானம் மூலம் உணவு பொருட்கள் வீசப்பட்ட நிலையில், பொருட்கள் சேதமடைவதாகவும், உணவு பொருட்களை கொண்டு வரும் லாரிகளை மட்டும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என காசா மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக காசா மக்கள் உணவின்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, ராணுவ விமானங்கள் மூலம் உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர்.