மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான கேப் வெர்டேவில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்த ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருந்த வாகனங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் வெள்ளத்தால் 8 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 3 பேரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.