அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தங்களது Fordow அணுசக்தி நிலையம் மிகவும் மோசமாக பெருமளவில் சேதமடைந்து விட்டதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார். ((Abbas Araqchi )) CBS தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ள அவர், Fordow வில் எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது யாருக்கும் தெரியாது என்றாலும்,அது மிகவும் மோசமாக சிதிலமடைந்துள்ளது என்பது மட்டும் தெரியும் என கூறினார். அங்குள்ள நிலைமையை ஈரானின் அணுசக்தி அமைப்பு மதிப்பீடு செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அனைத்து அணு சக்தி நிலையங்களும் தரை மட்டமாகி விட்டதாக அதிபர் டிரம்ப் கூறினாலும், சேதாரத்தின் அளவு குறித்து இப்போது முடிவுக்கு வர முடியாது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.