உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்திய புதிய போப் ஆண்டவர், சண்டை நிறுத்த முடிவை எடுத்த இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை பாராட்டினார். தனது முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வாழ்த்துச் செய்திக்காக பசிலிக்கா தேவாலய மாடத்தில் மீண்டும் தோன்றிய போப் லியோ, செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த மக்களிடையே பேசும்போது உலக அமைதியை வலியுறுத்தினார். தற்போது உலகத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கும் மோதல்கள், மூன்றாம் உலகப் போரின் தொடக்கப் புள்ளிகள் என்று போப் கண்டித்தார்.