அதிபர் டிரம்புடன் முரண்பட்டு பிரிந்த எலான் மஸ்க் அமெரிக்கா என்ற புதிய கட்சியை தொடங்கினார். உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்கும் அமெரிக்க அதிபர் டிரம்பும் நெருங்கிய நட்புடன் வலம் வந்த நிலையில், big beautiful என்ற மசோதாவால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரிடையே பிளவை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க், அமெரிக்க மக்களுக்கு மீண்டும் சுதந்திரத்தை திருப்பி தரக்கூடிய வகையில் கட்சி தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இரண்டு கட்சிகள் மட்டுமே ஆள முடியும் என்ற ஜனநாயக விரோத போக்கை முறியடிப்போம் என மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.