ஜப்பானின் ஹொக்கைடோ கடற்கரையில் இன்று அதிகாலை 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மனியின் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நெமுரோ தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் 6 புள்ளி 1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.