ஆப்பிள் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக மிரட்டல் விடுத்துள்ளார். ஆப்பிள் ஐபோன் உற்பத்தி ஆலையை அமெரிக்காவில் அமைக்க வேண்டும் என்றும் மாறாக உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ளும் பட்சத்தில் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.