போர் பதற்றம் தணிந்தாலும் ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் அரசு இரட்டை குடியுரிமையை அங்கீகரிக்கவில்லை என்றும் அமெரிக்க குடிமக்களுக்கான தூதரக சேவைகளை வழங்க ஈரான் மறுக்கிறது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும், ஈரானுக்கு செல்வது பாதுகாப்பானது அல்ல என்றதோடு, ஈரானுக்கு பயணம் செய்வதில் ஏற்படும் கடுமையான ஆபத்துகள் குறித்து அமெரிக்கர்கள் மற்றும் ஈரானில் குடியுரிமை பெற்ற அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார்.