ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என NATO நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். NATO நாடுகள் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், உக்ரைன்- ரஷியா போர் முடிவுக்கு வரும் எனவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் NATO நாடுகள் சீனாவுக்கு 50 முதல் 100 சதவிகிதம் வரை வரி விதிக்க வேண்டும் எனவும் டிரம்ப் கேட்டுக் கொண்டார்.