பிரதமர் நரேந்திர மோடிக்கு டொமினிகா நாட்டின் மிக உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் டொமினிகா நாட்டிற்கு சுமார் 70ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியா அன்பளிப்பாக வழங்கியது. மேலும், டொமினிகாவின் சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இந்தியா உதவிகளை அளித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக டொமினிகா நாட்டின் மிக உயரிய விருது பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கயானாவில் நடைபெற்று வரும் இந்தியா-காரிகாம் உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.