நியூயார்கில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஆடை அலங்காரத்தில் உரிமையாளர்களுடன் நாய்கள் நடைபோட்டு கலக்கின. விலங்குகள் நல அமைப்பிற்காக நிதி திரட்டும் வகையில் ELYSIAN Impact சார்பில் "CATWALK FURBABY" ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் 21 நாய்கள் கலந்து கொண்டன. விலங்குகள் தத்தெடுப்பை ஊக்குவிக்க இந்த ஃபேஷன் ஷோ நடத்தப்படுவதாக ELYSIAN Impact நிறுவனம் தெரிவித்துள்ளது. நியூயார்க் FASHION WEEK செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.