நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி இந்தியர்கள் மற்றும் யூதர்களை வெறுப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் எரிக் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய எரிக் டிரம்ப், நியூயார்க் நகருடன் போட்டியிடக் கூடிய அளவுக்கு, உலகில் வேறு எந்த நகரமும் இல்லை என்றும் ஆனால், இந்தியர்கள், யூதர்களை வெறுக்கும், இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒரு கம்யூனிஸ்ட் நபர் மேயாராக தேர்வாகி உள்ளதாக ஜோஹ்ரான் மம்தானியை சாடினார். பாதுகாப்பான மற்றும் சுத்தமான தெருக்கள், நியாயமான வரிகள் போன்றவற்றில் மேயர் ஜோஹ்ரான் மம்தானி கவனம் செலுத்தினால், அரசின் தலையீடு இல்லாமல் நியூயார்க் நகரம் செழிப்படையும் என எரிக் டிரம்ப் தெரிவித்தார்.