உலகின் பல்வேறு நாடுகளில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான இந்தியர்கள் பணி நிமித்தம் காரணமாக பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக குடியேறி உள்ள நிலையில், அவர்களும் அங்கேயே தீபாவளி கொண்டாடினர். இதனால் தீபாவளி பண்டிகை சர்வதேச அளவில் கவனம் பெற்று, உலகத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தீபாவளியை முன்னிட்டு நேபாளம், இலங்கை, பிஜி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.