நியூயார்க் நகரில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நியூயார்க் பொது நூலக கட்டடத்திற்கு முன்பு கூடிய மக்கள், டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் மன்ஹாட்டன் வீதிகளில் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் பேரணி சென்றனர்.