கனமழை காரணமாக கிழக்கு ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 158-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளுக்குள் சேறும், சகதியுமாக உள்ள தண்ணீர் புகுந்த நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்நாட்டு ராணுவமும் மீட்பு நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.