90 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் ஏராளமான திபெத்தியர்கள் ஒன்று கூடி தலாய் லாமாவின் பிறந்தநாளை, பாரம்பரிய நடனத்துடன் ஆடிப்பாடி கொண்டாடடினர். விழாவில் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ராஜீவ் ரஞ்சன் (லாலன்) சிங் மற்றும் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தலாய் லாமாவின் அடுத்த வாரிசு குறித்த சர்ச்சைகள் அதிகரித்துள்ள நிலையில், புத்த மதத்துக்கும், திபெத் மக்களுக்கும் சேவை செய்வதற்காக 130 வயது வரை தான் உயிர் வாழ விரும்புவதாக தலாய் லாமா கூறியுள்ளார்.