பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள், அதற்கான விளைவுகளை நிச்சயம் அனுபவித்தே ஆக வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.G 7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தினார்.பயங்கரவாதத்தை வளர்ப்பவர்கள், ஆதரிப்பவர்களுக்கு எதிராக கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரதமர் மோடி, உலகம் அமைதி மற்றும் செழிப்பாக வாழ, நமது சிந்தனைகளும், கொள்கைகளும் தெளிவாக இருக்க வேண்டும் என்றார். பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா கூறி வரும் நிலையில், ஜி-7 தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி கூறிய கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இதையும் படியுங்கள் : வெஸ்ட் இண்டீஸ்- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர்..