ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்புடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார். ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால், ஈரானால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் நாட்டிலுள்ள அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில், 3 அணுசக்தி தளங்களும் அழிந்ததாக அமெரிக்கா கூறினாலும், லேசான பாதிப்பு மட்டுமே ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை ஈரான் சீரமைத்து வரும் நிலையில், சர்வதேச அணுசக்தி அமைப்புடனான ஒத்துழைப்பை சஸ்பெண்ட் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.