ஹமாஸ் அமைப்பினர் வசமுள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் மீட்பதற்காக, இன்னும் ஒரு சில நாட்களில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகக் கூடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நம்பிக்கை தெரிவித்துள்ளார். Newsmax தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இது தொடர்பாக பேசிய நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 50 இஸ்ரேலிய பிணைக்கைதிகள் இருப்பதாகவும், அவர்களுள் 20 பேர் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். பிணைக்கைதிகள் அனைவரையும் மீட்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றாலும், தற்போதைக்கு அவர்களுள் பாதிபேரை மீட்பதற்குரிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் இருப்பதாக தெரிவித்தார்.