பெருவில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டம் மற்றும் நகர்ப்புற பயங்கரவாத மசோதாவை ரத்து செய்யக்கோரி லிமா நகரத்தில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பதிலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களும் பொருட்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு 60 நாள் அவசர நிலையை பிரகடனப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.