ரஷ்யாவின் வெற்றி தின ராணுவ அணிவகுப்பில் பங்கேற்கும் சீன படைகள், மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் கம்பீர நடையுடன் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டது. 2-ஆவது உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப்படையை வீழ்த்தி வெற்றிபெற்றதை நினைவுகூரும் வகையில், மே 9-ஆம் தேதி வெற்றி தின ராணுவ அணிவகுப்பை ரஷ்யா நடத்துகிறது. இந்த அணிவகுப்பில் பங்கேற்க, 119 அதிகாரிகள் கொண்ட சீன ராணுவ வீரர்கள் ரஷ்யாவுக்கு சென்றுள்ளனர்.