நடுக்கடலில் இருந்து சீனா விண்வெளிக்கு ஏவிய கிராவிட்டி 1 ராக்கெட் 3 செயற்கைக் கோள்களை சுமந்து கொண்டு பறந்தது. கிழக்கு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தின் ஹையாங் கடற்கரையிலிருந்து பெய்ஜிங் நேரப்படி காலை 10.20 மணிக்கு இந்த ராக்கெட்டை ஏவியது. இந்த கிராவிட்டி-1 கேரியர் ராக்கெட் 6.5 டன் எடையை பூமியின் சுற்றுப்பாதையில் சுமந்து செல்லும் திறன் கொண்டது எனவும், 4.2 டன் எடையை 500 கிலோ மீட்டர் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கு அனுப்பும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டால் ஒரே நேரத்தில் 10- க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : பாகிஸ்தானில் நேற்று இரவு 8.23 மணியளவில் திடீர் நிலநடுக்கம்