அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்ற 22 வயது இளைஞரை FBI அதிகாரிகள் கைது செய்தனர். யூட்டா பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த சார்லி கிர்க், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக பல்வேறு தனிப்படைகள் அமைத்து கொலைக் குற்றவாளி தேடப்பட்டுவந்த நிலையில், டைலர் ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் டைலர் ராபின்சன் சமீபத்திய காலமாகவே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்ததாகவும், சார்லி கிர்க் மீது அவர் வெறுப்பை மட்டுமே பரப்பியதும் தெரியவந்தது.இதையும் படியுங்கள் : ஐ.நா.வில் பயங்கரவாதம் தொடர்பான விவாதம் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு பாக். என விமர்சனம்