கொலம்பியாவில் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பழமைவாத ஜனநாயக மையம் கட்சியை சேர்ந்த எம்.பி. மிகுல் உர்பெல் டர்பே அதிபர் வேட்பாளராக களமிறங்கிய நிலையில், தலைநகர் பொகொடாவில் நடந்த பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, திடீரென அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர்.