ஈரானுடன் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்த தயார் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் அழைப்பை ஈரான் அரசு நிராகரித்துள்ளது. ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளதுடன் தங்களது அணுசக்தி நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்திய டிரம்ப் அமைதி உடன்படிக்கை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் ஜூலை மாதங்களில், அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் இஸ்ரேல், ஈரானின் ராணுவ, அணுசக்தி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் குண்டு வீசியதில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் போரில் ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. இத்தனையும் செய்து விட்டு பசுத்தோல் போர்த்திய புலியாக டிரம்ப் நாடகம் ஆடுவதாக ஈரான் கண்டித்துள்ளது.இதையும் படியுங்கள் : ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் விண்கலம் ஏவப்பட்டது