கலவரம் வெடித்து ஓய்ந்த நேபாளத்தில் இடைக்கால அரசால் நியமிக்கப்பட்ட மூன்று அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். 26 செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து நடந்த போராட்டம் தலைநகர் காத்மண்டுவில் கலவரமாக மாறியது. இதனால் பிரதமர் பதவியில் இருந்து சர்மா ஒலி ராஜினாமா செய்ததால், இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றிருந்தார்.