இரண்டாம் உலகப் போரின் வருடாந்திர வெற்றி தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, மத்திய மாஸ்கோவில் உள்ள ரெட் சதுக்கத்தில், அணிவகுப்பு நிகழ்ச்சி ஒத்திகையில் ரஷ்ய ராணுவத்தினர் ஈடுபட்டனர். ரஷ்யாவின் வெற்றிக்கு வழிவகுத்த வரலாற்று சிறப்புமிக்க T-34 டாங்கிகள் மற்றும் பீரங்கிகள் உள்பட ஏராளமான ராணுவ உபகரணங்களை ரஷ்ய ராணுவத்தினர் அணிவகுப்பில் எடுத்துச் சென்றனர்.