தோஹாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்த நிலையில், கத்தார் இரு நாடுகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் நடந்த அந்த பேச்சுவார்த்தையில், எல்லையில் வன்முறையை நிறுத்துதல், தொடர் கூட்டங்களை நடத்துதல் மற்றும் எல்லையில் நீண்டகால ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இரு நாடுகளும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.