ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எந்த அதிகாரமும் கிடையாது என தெரிவித்துள்ள சீனா, அப்படி தடை செய்ய எந்த விதமான சர்வதேச சட்டங்களிலும் வழிவகை கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.இப்படி விதிக்கப்படும் ஒருதலைபட்சமான தடைகளை சீனா தொடர்ந்து எதிர்த்து வருதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.