இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீதான வழக்கு விசாரணையை உடனே ரத்து செய்ய வேண்டுமென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2019-ஆம் ஆண்டு நெதன்யாகு மீது லஞ்சம், ஊழல், நம்பிக்கை மீறல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், தனது ட்ரூத் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், வரலாற்றில் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றான ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேலின் வரலாற்றில் வேறு எந்த போர் வீரனை போலவும் இல்லாத நெதன்யாகு ஒரு சிறந்த போர் வீரன் எனவும் தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க கோரி மாணவர் மனு..