H1B விசாவுக்கு டொனால்டு டிரம்ப் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இந்திய பணியாளர்களை ஈர்க்கும் விதமாக கனடா அரசு சலுகைகளை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் அதிகமான H1B விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார். H1B விசா வைத்திருப்பவர்கள் பலர் தொழில்நுட்ப துறையில் உள்ளதாகவும், கனடாவில் பணிபுரிய அவர்கள் விரும்புவதாகவும் மார்க் கூறினார். சலுகை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு மாற்று இடமாக கனடா இருக்கும் எனவும் மார்க் கார்னி கூறினார்.