பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் பேரிடர் மீட்பு படை வீரர்கள் தவித்து வருகின்றனர். காட்டுத்தீ காரணமாக மலைப்பகுதியில் இருந்து பெரும் புகை மூட்டம் பரவிவருகிறது. தீ மளமளவென பற்றி வருவதால், அரியவகை தாவரங்கள் மரங்கள் மற்றும் வன உயிரிகள் தீக்கிரையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.