இங்கிலாந்தில் ரயில் பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருவரை அந்நாட்டு போலீஸ் கைது செய்துள்ளது. சனிக்கிழமை மாலை லண்டன் நோக்கி சென்ற ரயிலில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அந்நாட்டை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தாக்குதலுக்கான காரணம் தெரிய வராத நிலையில், தொடர்ந்து விசாரணை முழு வீச்சில் நடந்து வருகிறது.