பிரிட்டன் இளவரசர் ஹாரியின் உயிரியல் தந்தை மன்னர் சார்லஸ் அல்ல என்ற பழைய வதந்தியை பொய்யாக்கும் வகையில் புதிய சாட்சியம் ஒன்று கிடைத்துள்ளது. இளவரசி டயானாவில் பயிற்சியாளரான James Hewitt என்பவருடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும் James Hewitt மூலம் பிறந்த குழந்தை தான் தற்போதை இளவரசர் ஹாரி என்றெல்லாம் 80களில் மிகப்பெரிய அளவில் வதந்திகள் பரவின. இந்த நிலையில் இளவரசர் ஹாரியின் தந்தை மன்னர் சார்லஸ் தான் என அடித்து கூறுகிறார் டயானாவின் சிகையலங்கார நிபுணர் ரிச்சர்ட் டால்டன் . இது குறித்து ஃபாக்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ஹாரி பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1986-ம் ஆண்டு தான் James Hewitt-ஐ டயானா முதன்முதலில் சந்தித்ததாக கூறுகிறார்.