தாய்லாந்தும், கம்போடியாவும் மலேசியாவில் இன்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. எல்லை விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் மோதல் தீவிரமடைந்து வருகிறது. போர் அபாயம் ஏற்படும் நிலையில் இரு தரப்பிலும் இதுவரை 33 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் எல்லை பகுதியில் இருந்து வெளியேறி உள்ளனர். இந்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணவில்லையெனில் இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தம் செய்ய போவதில்லை என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில், இருநாடுகளும் இன்று அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபடுகின்றன.