தென்மேற்கு கொலம்பியாவில் காவல்துறையினரை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர், 28 பேர் காயமடைந்தனர். நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான காலி மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் நகராட்சி கட்டடங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் பின்னால் கொரில்லா குழுக்கள் இருப்பதாக சந்தேகிக்கும் ராணுவம், 20க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடந்ததாக தெரிவித்துள்ளது. போகோட்டாவில் ஜனாதிபதி வேட்பாளரை படுகொலை செய்ய முயன்ற சில நாட்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.