காசாவில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், அமெரிக்காவை சேர்ந்த மனிதாபிமான அறக்கட்டளை பணியாளர்கள் இருவர் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். காயமடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் மற்றும் பஞ்சத்தால் தவித்து வரும் ஆயிரக்கணக்கான காசா மக்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்ட நிலையில், அந்நிகழ்வு முடியும் தருவாயில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த இருவர் அமெரிக்க பணியாளர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக காசா மனிதாபிமான அறக்கட்டளை தெரிவித்துள்ளது.