போயிங் விமான நிறுவனம் 17 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. சம்பள உயர்வு கோரி போயிங் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தனது 737 MAX, 767 மற்றும் 777 ஜெட் விமானங்களின் உற்பத்தியை போயிங் நிறுவனம் ஒரு வருடம் தாமதப்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு மற்றும் நிதி இழப்பை சரி செய்ய 10 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்வது என போயிங் நிறுவனம் முடிவு செய்து, அதன்படி 17 ஆயிரம் பேர் வேலையிழக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.