சிங்கப்பூர் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவில் வாக்காளர்கள் ஆர்வமுடன் ஜனநாயக கடமையாற்றினர். பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையிலான மக்கள் செயல் கட்சிக்கு எதிராக தொழிலாளர்கள் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்ற கட்சி களம் காணும் நிலையில், காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாகவே வாக்கு மையத்திற்கு வந்திருந்த வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை ஆர்வமுடன் பதிவு செய்தனர். கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் கட்சிக்கு 63 சதவீதம் பேரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 15 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்த நிலையில், ஆளும் கட்சி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக லாரன் வோங் தொடருவார் எதிர்பார்க்கப்படுகிறது.