பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி, 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்தும், 7 நாடுகளை சேர்ந்தவர்கள் பகுதியளவு கட்டுப்பாடு விதித்தும் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹைதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள முடியாது. இதுதவிர புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய பகுதியளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் ஜூன் 9-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.