ஈரானில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதற்காக அந்நாட்டு உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமினி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. ஈரானிய தொழிலதிபர் பாபக் சஞ்சானி மற்றும் ஈரான் புரட்சி காவலர் படை உடன் தொடர்புடைய லண்டனை தளமாகக் கொண்ட கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைகள், சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்துக்களை முடக்குவதையும், நிதி பரிவர்த்தனைகளை தடுப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. Related Link பினாயில் தொழிற்சாலை என்ற பெயரில் போதைப்பொருள் ஆய்வகம்