கடந்த ஆண்டு 38 பேர் கொல்லப்பட்ட அஜர்பைஜான் விமான விபத்துக்கு ரஷ்ய வான் பாதுகாப்பு படைகளே காரணம் என ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக் கொண்டுள்ளார். உக்ரைன் டிரோன்களைக் கண்காணித்தபோது, ரஷ்யாவால் ஏவப்பட்ட 2 வான் பாதுகாப்பு ஏவுகணையால் விமானம் சேதமடைந்ததாகவும், இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் புதின் தெரிவித்தார்.