போர் என்பது பிரச்னைகளை தீர்க்காது என்பதால், ஆபத்தில் ஆழ்த்தும் போரை தவிர்க்க வேண்டும் என போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது சமூக வலைதள பதிவில், போர் பெரிய காயங்களை ஏற்படுத்துவதால் வன்முறை மற்றும் மோதல் வேண்டாம் எனவும், அபாயத்தை ஏற்படுத்தும் போரை தவிர்க்க சர்வதேச சமூகம் பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மோதலுக்கு பதிலாக ராஜதந்திரம் இருக்க வேண்டும் எனவும், போரின் துயரம் சரிசெய்ய முடியாத படுகுழியாக மாறுவதற்கு முன்பு அதை தடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதோடு, மத்திய கிழக்கிலிருந்து, குறிப்பாக, ஈரானிலிருந்து தொடர்ந்து அச்சமூட்டும் செய்திகள் வெளிவருவதாக தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : நாதக சார்பில் நடைபெற்ற கொள்கை விளக்க பொதுக்கூட்டம் பொதுக் கூட்டத்தில் நாதக-திமுகவினர் இடையே வாக்குவாதம்..!