அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு மார்வெல் ஹீரோக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மார்வெல் சினிமேட்டிக் யூனிவெர்சில் சூப்பர் ஹீரோக்களாக நடித்து பிரபலமான ராபர்ட் டொனி ஜூனியர் , ஸ்கார்லெட் ஜோஹான்சன், கிறிஸ் எவன்ஸ் உள்ளிட்டோர் வீடியோ காலில் இணைந்த போது அமெரிக்கா அதிபர் தேர்தல் குறித்து விவாதித்தனர். அப்போது ஜனநாயகத்திற்காக ஒன்றுகூடுவோம் என வலியுறுத்திய அவர்கள், கமலா ஹாரிசுடன் துணை நிற்பதாக கூறினார். மார்வெல் ஹீரோக்களுக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், இவர்களின் ஆதரவு தேர்தல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.