ஆஸ்திரேலிய பொதுத்தேர்தலில் காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு வாக்களித்து வருகின்றனர். தொழிலாளர் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சி இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், தொழிலாளர் கட்சிக்கு சாதகமாக இருப்பார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வாக்குப்பதிவு தொடங்கியதும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், லிபரல் கட்சியின் தலைவர் பீட்டர் டட்டன் வாக்களித்தனர். பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். அப்போது சிலர் செல்லபிராணிகளுடனும், நீச்சல் உடையில் வந்தும் வாக்களித்து கவனம் ஈர்த்தனர். ஆஸ்திரேலியாவில் கட்டாய வாக்களிப்பு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.